மத்திய அமைச்சரவையில் எதிர்பார்க்கப்படும் மாற்றம்??
குளிர்கால கூட்டத் தொடருக்கு பின்னர் மத்திய அமைச்சரவையில் மாற்றம் ஏற்படக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
துணை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். வெங்கய்ய நாயுடு மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை பொருப்பு ஸ்மிருதி இராணியிடம் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர பாதுகாப்புத், நிதி மற்றும் சுற்றுச் சூழல் ஆகிய மூன்று அமைச்சர் பொருப்புகளையும் அருண் ஜெட்லி ஒருவரே கவனித்து வருகிறார்.
இந்நிலையில், விரைவில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.