ரயில் சேவையில் மாற்றம்…ரயில்வே துறை அறிவிப்பு
இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில் இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது.
அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில்,ஒரு சில மாநிலங்களில் கொரொனா பாதிப்பு குறைந்து வருவதால் அங்கு அம்மாநில அரசுகள் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வேதுறை அறிவித்துள்ளது.
அதில்,புருலியா வாரம் இருமுறை சிறப்பு ரயில் நாளை மாலை 4.05 மணிக்கு புறப்படும் எனவும், வண்டி எண் 06170 விழுப்புரம் – புரிலியா அதிவிரைவு ரயில் மதியம் 12.05 மணிக்கு புறப்பட வேண்டியது 4 மணிநேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும், சென்னை செண்ட்ரல் – ஹவுரா சிறப்பு ரயில் செண்ட்ரலில் இருந்து நாளை இரவு -8-30 க்குப் புறப்பட்டு செல்லும் என கூறியுள்ளது.