1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 2 பிப்ரவரி 2019 (22:25 IST)

மோடியை வீழ்த்த டெல்லியில் ஆலோசனை செய்த இரு முதல்வர்கள்

நாடாளுமன்றத்துக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் வரவுள்ளதை அடுத்து அனைத்து எதிர்க்கட்சிகளும் மோடியை வீழ்த்த வியூகம் அமைத்து வருகின்றன. இருப்பினும் எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாததால் மோடியை வீழ்த்த சாத்தியமா? என்பது தெரியவில்லை.
 
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை, அவரது இல்லத்தில் தெலுங்குதேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு நேற்றிரவு சந்தித்து பேசினார்.
 
இந்த சந்திப்பின்போது, நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசை வீழ்த்த இருவரும் ஆலோசனை செய்ததாகவும், தேர்தலின்போது இருவரும் கைகோர்த்து பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய முடிவெடுத்ததாகவும் தெரிகிறது. இந்த தகவலை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.