முன்னாள் முதல்வரின் சொத்துக்கள் திடீர் முடக்கம்! அரசின் அதிரடி அரசாணை..
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொத்துக்களை திடீரென முடக்க ஆந்திரா அரசு அரசாணை வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் இருக்கும் சந்திரபாபுவின் வீடு மற்றும் முன்னாள் அமைச்சர் நாராயணாவின் சொத்து ஆகியவை முடக்கப்பட்டுள்ளதாகவும் அமராவதியில் விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தியதில் முறைகேடு நடந்ததை அடுத்து சந்திரபாபு மற்றும் நாராயணா மீது புகார் எழுந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆந்திரா அரசு தெரிவித்துள்ளது.
சந்திரபாபு நாயுடுவின் விருந்தினர் மாளிகை மற்றும் முன்னாள் அமைச்சர் நாராயணவுக்கு சொந்தமான 22 அசையா சொத்துக்களை முடக்க மத்திய அரசு ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசு ஆந்திர அரசுக்கு அறிவுறுத்தியதாகவும் அந்த அறிவுறுத்தலின் அடிப்படையில் சொத்துக்கள் பறிமுதல் செய்வதற்கான உத்தரவுகளை ஆந்திர அரசு பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு மற்றும் நாராயணா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran