ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு: நடிகர் ஆர்.கே சுரேஷ் வங்கி கணக்கு முடக்கம்..!
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர்கே சுரேஷ் வங்கி கணக்கை காவல்துறையினர் முடக்கம் செய்துள்ளதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆருத்ரா நிதி நிறுவன மோசடி குறித்த தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் பிரபல பாஜக பிரபலங்கள் இந்த மோசடியில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த மோசடி குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வரும் நிலையில் நடிகர் ஆர்கே சுரேஷ் இந்த மோசடியில் சம்பந்தம் இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து அவர் விசாரணை வலையத்திற்குள் வந்துள்ளார்.
இந்த நிலையில் ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர்கே சுரேஷ் வங்கி கணக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Edited by Siva