திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sasikala
Last Modified: ஞாயிறு, 12 மார்ச் 2017 (11:34 IST)

சந்திர பாபு நாயுடுவை டொனால்ட் டிரம்புடன் ஒப்பிட்டு நடிகை ரோஜா கருத்து!

அமெரிக்க அதிபராக உள்ள டொனால்ட் டிரம்ப் பெண்களிடம் எப்படி நடந்து கொள்வாரோ, அதே போல சந்திர பாபு நாயுடு ஆந்திர பெண்களிடம் நடந்து கொள்கிறார்” என நடிகை ரோஜா விமர்சனம் செய்துள்ளார்.

 
நடிகை ரோஜா, தற்போது வொய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவாக உள்ளார். ஆந்திர முதல்வரான சந்திர பாபு நாயுடுவை தொடர்ந்து விமர்சித்து வரும் ரோஜா, சமீபத்தில் நடந்த கட்சிக் கூட்டத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட்  டிரம்ப்புடன் சந்திர பாபு நாயுடுவை ஒப்பிட்டுள்ளார். “டிரம்ப் அமெரிக்க பெண்களுக்கு தொல்லை கொடுக்கிறார். அதைப் போல ஆந்திராவில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலை சந்திர பாபு நாயுடு உருவாக்கி வைத்துள்ளார்.
 
லஞ்சம் வாங்குவதில் ஆர்வம் காட்டும் தெலுங்கு தேசம் கட்சியின் பெண் எம்.எல்.ஏக்கள், ஆந்திர பெண்களின் பாதுகாப்பை  காற்றில் பறக்கவிட்டு, அவர்கள் நலத்திற்காக ஒரு சிறு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை. 100-க்கும் மேற்பட்ட பெண்களை  பாலியல் தொழிலில் தள்ளிய ‘கால் மணி’ ஊழலில் பல தெலுங்கு தேசம் எம்.எல்.ஏக்கள் சம்மந்தப்பட்டுள்ளனர். அவர்கள் மீது தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என நடிகை ரோஜா பேசியுள்ளார்.