3 மாதங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: கொரோனா குறித்து மத்திய அரசு
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் தமிழகத்தில் 1400க்குள் தினசரி பாதிப்பு குறைந்து விட்டது என்பதும் இந்தியாவில் 20 ஆயிரத்துக்கும் குறைந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வந்தாலும் கொரோனா சவால் இன்னும் முழுமையாக நீங்கவில்லை என்றும் குறிப்பாக அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மூன்று மாதங்கள் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மூன்றாவது அலை உருவாகுவதற்கு வாய்ப்புகள் குறைவு என்றாலும் பொதுமக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது என்றும் மிகுந்த எச்சரிக்கையுடன் வரும் டிசம்பர் மாதம் வரை இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது