கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியுடன் இணைக்க அவசர சட்டம்! – அமைச்சரவை முடிவு!
இந்தியா முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வர அவசர சட்டம் இயற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியா முழுவதும் சிறு அளவிலாம நகர்புற மற்றும் கிராமப்புற கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. மற்ற வங்கிகளை போலவே ரிசர்வ வங்கியின் கீழ் வராத வங்கிகளில் கூட்டுறவு வங்கிகளும் அடக்கம். பொதுவாக திவாலாகும் நிலையில் உள்ள வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது வாடிக்கையாக இருந்து வந்தது.
இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கும், அதற்கான அவசர சட்டம் இயற்றுவதற்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இதன்மூலமாக 1,482 நகர்புற வங்கிகள் ரிசர் வங்கியின் கட்டுப்பாட்டில் வர இருப்பதாக கூறப்படுகிறது.