செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 22 ஜூன் 2020 (08:01 IST)

கொரோனா பாதிப்புக்கு இடையிலும் தேர்தலை நடத்திய முதல் நாடு?

கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில் செர்பியாவில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலால் உலகமே தலைகீழாக மாறியுள்ளது. இதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கை வாழ முடியாத சூழல் உருவாகியுள்ளது. ஆனால் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து செர்பிய நாடு நாடாளுமன்ற தேர்தலை நேற்று நடத்தி முடித்துள்ளது.

ஏப்ரல் மாதமே நடக்க இருந்த தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு பின்னரும் ஆளும் செர்பிய முற்போக்கு கட்சி தேர்தலை நடத்தியுள்ளது. இந்த தேர்தலில் 60 லட்சம் பேர் 250 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களித்துள்ளனர். இதன்  மூலம் கொரோனா வைரஸ் பாதிப்புக்குப் பின்னர் தேர்தலை நடத்தியுள்ள முதல் நாடாக செர்பியா மாறியுள்ளது.