2027க்குள் இந்தியாவில் 157 தனியார் ரயில்கள்! – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
ரயில்வே சேவையில் தனியாருக்கு இடமளிக்கும் வகையில் 157 ரயில் சேவைகள் தனியார்மயமாக இருப்பதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
ரயில்வே துறையில் தனியார் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில் 2027ம் ஆண்டிற்குள் 157 தனியார் ரயில்கள் இந்தியா முழுவதும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2023ம் ஆண்டில் 12 ரயில்களும், 2024ல் 45 ரயில்களும், 2026ல் 50 ரயில்களும், 2027ம் ஆண்டில் 44 ரயில்களும் என மொத்தமாக் 157 தனியார் ரயில்கள் இந்தியாவில் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.
இதற்கான உற்பத்தியில் 70 சதவீதம் உள்நாட்டில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் 30 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெண்டர்கள் பணிகள் முடிந்து அடுத்த ஆண்டு மார்ச்சில் ரயில் சேவைகள் தொடங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.