செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 16 ஜனவரி 2021 (15:18 IST)

Ground Report: தடுப்பூசி குறித்த விவரங்களுக்கு... அழையுங்குள் 1075: அரசு அறிவிப்பு!!

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இன்று தொடங்கப்படுகிறது.

 
கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். நாடு முழுவதும் 3006 மையங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திட்டம் இன்று தொடங்கப்படுவதால் இது குறித்த விவரங்களைப் பெறும் டோல் ஃப்ரி எண்ணை அரசு அறிவித்துள்ளது. தடுப்பூசி குறித்த விவரங்களை பெற 1075 என்ற எண்ணுக்கு அழைக்கலாம். 
 
இதுவரை நாடெங்கும் பல்வேறு நகரங்களில் உள்ள 3,006 மையங்களுக்கு ஒரு கோடியே 65 லட்சம் தடுப்பூசிகள் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் தினசரி 100 பேருக்கு ஊசி போடப்படும் என்றும், பின்னர் இவை படிப்படியாக அதிகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.