திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (19:09 IST)

’ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் கொண்டு வர மத்திய அரசு திட்டம்?

PM Modi
வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ள  நிலையில், இதற்காக அனைத்து கட்சிகளும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

ஏற்கனவே தொடர்ந்து இரண்டுமுறை பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்த பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவும் அடுத்த தேர்தலில் வெற்றி பெற கூட்டணி வியூகங்களை வகுத்து வருகிறது.

கடந்த மாதம்  18 ஆம் தேதி டெல்லியில் தேசிய ஜன நாயக கூட்டணியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு அதிமுக, தமாக, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, தமமுக, ஐஜேகே, உள்ளிட்ட 38 கட்சிகள் பங்கேற்றன.

இந்த நிலையில், சமீபத்தில்  நாடாளுமன்றத்தில்   நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரில் இந்திய தண்டனை சட்டங்களின் பெயர் மாற்றம்,.  டெல்லியில் மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளிட்ட பல சட்ட மசோதாக்களை தாக்கல் செய்த பிரதமர் மோடி தலைமையிலான மத்தியன் பாஜக அரசு ’ஒரே நாடு ஒரே தேர்தலைக்’ கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் சட்ட மசோதாவை மத்திய பாஜக அரசு தாக்கல் செய்யவிருப்பதாக தகவல் பரவி வருகிறது. வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்ட மசோதா தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.