1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (09:25 IST)

செல்போன் சார்ஜர் வயரை வாயில் வைத்த 8 மாத குழந்தை: மின்சாரம் தாக்கி பரிதாப பலி..!

செல்போன் சார்ஜர் வயரை வாயில் வைத்து கடித்தால் 8 மாத குழந்தை மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. 
 
பெங்களூரில்  சந்தோஷ் - சஞ்சனா தம்பதியின் 8 மாத குழந்தை தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. 
 
அப்போது பிளக்கில் சொருகப்பட்டு இருந்த சார்ஜரில் மின் இணைப்பு அணைக்காமல் இருந்த நிலையில் அந்த சார்ஜரை குழந்தை விளையாட்டாக வாயில் வைத்து கடித்தது. 
ஒரு கட்டத்தில் அந்த வயரை அவர் வாயில் கடித்த போது திடீரென எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்ததாக தெரிகிறது. 
 
செல்போன் சார்ஜரை சார்ஜ் போட்டு முடித்தவுடன் மின் இணைப்பில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்று பலமுறை அறிவுறுத்தப்பட்டிருந்தும் பெற்றோர் செய்த ஒரு சிறு தவறினால் சின்னஞ்சிறு சிறுமி உயிர் இழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva