புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 4 ஜூலை 2019 (21:07 IST)

அனைத்து சிறைகளிலும் சிசிடிவி கேமரா ! முதல்வர் அதிரடி

இன்றைய நவீன உலகில் எந்த அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதோ..அந்த அளவுள்ள குற்றங்களும் குற்றவாளிகளும் பெருகியுள்ளது துரதிஷ்டவசமானது. அதனால் உலகில் அனைத்து இடங்களிலும் போலீஸ் பாதுகாவலுக்கு இருந்தாலும் கூட.. தற்போது அதற்கும் மேலாக கடவுள் கண் போலவும், மூன்றாவது கண்ணாகவும் இந்த சிசிடிவி கேமரா உள்ளது.
எத்தையோ ,கொலை, கொள்ளை, திருட்டு, போன்ற சம்பவங்களில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க போலிஸுக்கு  உதவியாகவும், குற்றசம்பவங்கள் நடக்காமல் மக்களைக் காக்கவும் இந்த சிசிடிவி கேமரா உதவிகரமாக உள்ளது.
 
இந்நிலையில், சண்டிகர் மாநிலத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில்  பஞ்சாபிலுள்ள அனைத்து சிறைகளிலும்  சிசிடிவி கேமரா அமைக்கபடவுள்ளதாக அம்மாநில முதல்வர் (காங்கிரஸ் ) அம்ரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.