எல்லாம் சரி இருந்தாலும் ஏன் இப்படி? பாஜக எம்பியின் காலை கழுவி நீரை குடித்த தொண்டர்
ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டாவில் தொண்டர் ஒருவர் பாஜக எம்பி நிஷிகந்த் துபேவின் காலை கழுவி அந்த நீரை குடித்து, தலையில் தெளித்துக்கொண்டே சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டாவில் கான்பாரி மற்றும் காலாளி கிராமங்களுக்கு இடையே ஓடும் தஜியா ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் அப்பகுதி மக்களுக்கு பெரிய அளிவில் உதவியாகவும், வசதியாகவும் இருந்தது.
இந்த பாலத்தை கட்டுவதற்கு அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த பாலத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றுள்ளது.
இதனை முன்னிட்டு திறப்பு விழாவில் கோட்டா தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.பி நிஷிகந்த் துபே கலந்துக்கொண்டார். அப்போது பாஜக தொண்டர் ஒருவர் அவரது காலை கழுவி, அந்த நீரை குடித்து தலையில் தெளித்துக்கொண்டார்.
மேலும் இதுகுறித்து அந்த தொண்டர், கிராமத்தின் நீண்ட கால கோரிக்கையான இந்த பாலத்தை கட்டி தரப்பட்டதால் இதுபோன்று நன்றிக்கடனை செலுத்தினேன் என்று கூறியுள்ளார்.