1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By bala
Last Modified: புதன், 1 பிப்ரவரி 2017 (13:02 IST)

பட்ஜெட் 2017: மூத்த குடிமக்களின் முதலீட்டுக்கு 8 சதவீதம் வட்டி உத்தரவாதம்

2017-ஆம் ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதனையடுத்து இன்று நிதியமைச்சர் அருண்  ஜெட்லி மத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முதல் முறையாக ரயில்வே பட்ஜெட்டுடன் இணைந்து இன்று தாக்கல் செய்யப்படுகிறது. ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது வரலாற்று முக்கியவத்தும் வாய்ந்தது. பட்ஜெட் தாக்கல் செய்து அவர் பேசியபோது,


 

மூத்த குடிமக்களின் முதலீட்டுக்கு 8 சதவீதம் வட்டி உத்தரவாதம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் மூத்த குடிமக்களின் ஆரோக்கிய மேம்பாட்டுக்காக ஆதார் அட்டை அடிப்படையில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.