வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 10 ஜனவரி 2024 (16:34 IST)

மாலத்தீவுக்கு இனி புக்கிங் இல்லை.. இந்திய சுற்றுலா நிறுவனங்கள் அறிவிப்பு..!

மாலத்தீவுக்கு இனி புக்கிங் இல்லை என இந்திய சுற்றுலா நிறுவனங்கள் அறிவிப்பு செய்துள்ளதால் மாலத்தீவு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
 
இந்திய சுற்றுலா நிறுவனங்கள், மாலத்தீவுக்கு புதிய சுற்றுலா பயணிகளுக்கான புக்கிங்கை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளன.  
 
 சமீபத்தில் பிரதமர் மோடி லட்சத்தீவுக்கு சென்ற நிலையில் இது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மாலத்தீவு அமைச்சர்கள் பேசினர். அவர்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டபோதிலும் இந்தியா மற்றும் மாலத்தீவு இடையே  கருத்து வேறுபாடு அதிகரித்து வந்தது. 
 
எனவே இந்திய சுற்றுலா நிறுவனங்கள் மாலத்தீவுக்கு இனிய புதிதாக புக்கிங் இல்லை என அறிவித்துள்ளது. எனவே இந்தியாவிலிருந்து இனி ஒரு நபர் கூட மாலத்தீவு சுற்றுலா செல்ல வாய்ப்பு இல்லை
 
இதனை அடுத்து சீனாவிடம் மாலத்தீவு கெஞ்சி வருகிறது. சீனர்கள் அதிக அளவில் மாலத்தீவுக்கு சுற்றுலா வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு சீனா தரப்பிடம் இருந்து எந்த விதமான பதிலும் இல்லை. 
 
மாலத்தீவு பெரும்பாலும் சுற்றுலா வருமானத்தை நம்பி இருக்கும் நிலையில் அந்நாடு இந்தியாவை பகைத்துக் கொண்டது சரி இல்லை என மாலத்தீவு எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் முன்னாள் சபாநாயகர் தெரிவித்துள்ளனர்.
 
 இந்த நிலையில் மாலத்தீவில் உள்ள சுற்றுலா நிறுவனங்கள், இந்திய சுற்றுலா நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் பிரதமர் மோடிக்கு எதிரான விமர்சனத்திற்கு வருந்துகிறோம், நடந்ததை மறந்து விட்டு எங்கள் நாட்டிற்கு புக்கிங் செய்து தாருங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva