புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 10 ஜனவரி 2022 (22:17 IST)

பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கொரோனா உறுதி!

பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் மூன்றாவது அலை கொரொனா வேகமாகப் பரவி வருகிறது.  இதைத் தடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைள் எடுத்து வருகிறது.  

சமீபத்தில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கொரொனா கட்டுப்பாடுகள் விதிகப்பட்டன.

சமீப நாட்களாக பல்வேறு சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் விரைவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைய வேண்டுமென பாஜகவினர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.