கமிஷன் கொடுக்காததால் சாலையை பெயர்த்தெடுத்த பாஜக எம்.எல்.ஏ
உத்தரபிரதேசம் மாநிலத்தில் கமிஷன் கொடுக்காததால் சாலையை பெயர்த்தெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
இங்குள்ள ஷாஜகான்பூரில் புதியதாக போடப்பட்ட சாலையில் இருந்து அரை கிமீ நீள சாலை புல்டோசர் வைத்து பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, பாஜக எம்.எல்.ஏ விக்ரம் சிங் தரப்பில்ஜக்வீர் சிங் என்பவர் கமிஷன் கேட்டு அழுத்தம் கொடுத்து வந்ததாகவும், தர மறுத்ததால், அடியாட்கள் வைத்து,சாலையை பெயர்த்தெடுத்ததாக ஒப்பந்ததாரர் போலீஸார் புகார் அளித்துள்ளார்.
இப்புகாரின்படி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.