திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (10:45 IST)

வீடு புகுந்து பலாத்காரம்… பாலக்காட்டில் பாஜக நிர்வாகி கைது!

பாலக்காட்டில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பாஜக இளைஞர் அணி நிர்வாகியை போலீஸார் கைது செய்துள்ளனர்.


கேரள மாநிலம் பாலக்காட்டின் அருகே உள்ள மலம்புழா எனும் பகுதியில் உள்ள 15 வயது சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர் அவரை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். பரிசோதனையின் போது சிறுமி கர்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது.

உடனடியாக பரிசோதித்த மருத்துவர் குழந்தைகள் நல அலுவலர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக மருத்துவமனை வந்தடைந்த குழந்தைகள் நல அலுவலர்கள் சிறுமியிடம் தனியாக நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது அந்த சிறுமி, அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் (வயது 26) என்பவருடன் பழக்கம் இருந்ததாகவும் ரஞ்சித் அந்த பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி நிர்வாகி எனவும் திருமணம் செய்துக்கொள்வதாக கூறிவிட்டு பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார் என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகள் போலீசில் புகார் செய்தனர். பின்னர் போலீசார் ரஞ்சித் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு கைது செய்தனர்.