கர்நாடகத்தில் பாஜக முன்னிலை..
கர்நாடகா 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் பாஜக முன்னிலை வகித்துள்ளது.
கர்நாடகாவில் 15 தொகுதிகளில் இடைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை தற்போது எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் 10 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
இதன் மூலம் கர்நாடகாவில் எடியூரப்பா தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் இரண்டு தொகுதியிலும், காங்கிரஸ் இரண்டு தொகுதிகளிலும் முன்னிலை வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.