செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 27 மார்ச் 2018 (12:51 IST)

தேர்தல் ஆணையத்திற்கு முன்பே கர்நாடக தேர்தல் தேதியை அறிவித்த பாஜக நிர்வாகி: பெரும் பரபரப்பு

இன்று காலை தேர்தல் ஆணையம் கர்நாடக மாநிலத்தின் தேர்தல் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்தது. கர்நாடக மாநில சட்டசபைக்கு வரும் மே மாதம் 12ஆம் தேதி தேர்தல் என்றும், பதிவான வாக்குகள் மே 15ஆம் தேதி எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஆனால் தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு ஒருசில நிமிடங்களுக்கு முன்னரே பாஜக ஐடி விங் நிர்வாகியான அமித் மால்வியா தனது டுவிட்டர் பக்கத்தில் கர்நாடக தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை பதிவு செய்தார்.

இது அனைவருக்கும் ஆச்சர்யம் அளித்தது. எப்படி உங்களால் தேர்தல் ஆணையத்திற்கு முன்பே தேர்தல் தேதியை அறிவிக்க முடிந்தது என்று நெட்டிசன்கள் கேள்விக்கணைகளை துளைத்தெடுக்க அதிர்ச்சி அடைந்த அமித் மால்வியா, உடனே அந்த டுவீட்டை டெலிட் செய்துவிட்டார்.

இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் அவர்களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப கண்டிப்பாக இதுகுறித்து விசாரணை செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.