புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 10 மார்ச் 2022 (11:18 IST)

லக்கிம்பூரை கூட விட்டு வைக்கல.. பாஜக எதிர்பாராத வாக்கு வசூல்!

உத்தர பிரதேசத்தில் பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில் சர்ச்சைக்குரிய தொகுதிகளிலும் பாஜக கை ஓங்கியுள்ளது.

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள் பல கட்டங்களாக நடந்து முடிந்தது. தற்போது 5 மாநிலங்களுக்கும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி உத்தர பிரதேசத்தில் 403 தொகுதிகளில் பாஜக 265 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சமாஜ்வாதி கட்சி 133 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 3 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.

விவசாயிகள் போராட்டத்தின்போது பாஜக அமைச்சர் சென்ற ஊர்வலத்தின் கார் மோதி லக்கிம்பூரில் விவசாயிகள் பலியான சம்பவத்தால் அங்கு பாஜக வெற்றிபெற சாத்தியமில்லை என்றே எதிர்கட்சிகள் கருதின, அதுபோல இளம்பெண் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட ஹத்ராஸ் மாவட்டங்களிலும் பாஜக வலிமை இழக்கும் என கருதப்பட்டது. ஆனால் இந்த தொகுதிகளில் பாஜக அதிக வாக்குகள் முன்னிலையில் உள்ளது எதிர்கட்சிகளுக்கு ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.