செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 15 மே 2018 (10:45 IST)

118 இடங்களில் முன்னிலை ; தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் பாஜக?

ஆட்சி அமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலையில் இருப்பதால கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

 
நடைபெற்று முடிந்த கர்நாடக தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், தொடக்கம் முதலே பாஜக முன்னிலையில் வகித்து வந்தது. திடீரெனெ காங்கிரஸ் முன்னிலையில் இருந்தது. ஒருகட்டத்தில் காங்கிரஸும், பாஜகவும் மாறி மாறி முன்னிலையில் இருந்தன.  தற்போதைய நிலவரப்படி பாஜக 118, காங்கிரஸ் 58, மஜத 44 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது.   
 
ஆட்சி அமைக்க 112 இடங்கள் வேண்டும் என்கிற நிலையில், 118 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. எனவே, ஆட்சி அமைக்க மதசார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவை பெற வேண்டிய சூழ்நிலை பாஜகவிற்கு தற்போது இல்லை. ஆட்சி அமைக்க தேவையான இடங்களை பெற்று நாங்கள் முன்னிலையில் இருக்கிறோம். எனவே, மஜத-வுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க வேண்டிய சூழ்நிலை இல்லை” என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா ஏற்கனவே கூறியிருந்தார்.
 
தற்போது 118 இடங்களில் பாஜக முன்னிலையில் இருப்பதால் அவர் கூறியிருப்பது நிரூபிக்கப்பட்டு, கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.