1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 3 ஜூன் 2017 (16:08 IST)

பிளஸ்2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர் கைது

பீகார் மாநிலத்தில் பிளஸ்2 தேர்தில் முதலிடம் பிடித்த மாணவர் முறைகேடு செய்திருப்பது தெரியவந்ததை அடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.


 

 
பீகார் மாநிலத்தில் அண்மையில் வெளியான பிளஸ்2 தேர்வு முடிவில் கணேஷ் குமார் என்ற மாணவர் கலைப்பிரிவில் 82.6% பெற்று மாநிலத்துல் முதலிடம் பிடித்தார். இதையடுத்து தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த கணேஷ், இசை குறித்து கேட்கபட்ட அடிப்படை கேள்விக்கு தவறாக பதில் அளித்துள்ளார். 
 
இதனால் இவர் மீது சந்தேகம் அடைந்து விசாரணை நடத்திய பீகார் மாநில பள்ளிகள் தேர்வு வாரியம், கணேஷ் குமாரின் தேர்ச்சியை ரத்து செய்தது. அதோடு அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் கணேஷ் மீது வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
கடந்த ஆண்டு இதேபோல் அரசியல் பாடப்பிரிவில் முதலிடம் பெற்ற மாணவி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.