புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : திங்கள், 24 பிப்ரவரி 2020 (15:48 IST)

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்களை அங்கேயே சுட்டுக் கொல்ல வேண்டும்.. பாஜக அமைச்சர் பகீர்

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசும் தேச துரோகிகளை அந்த இடத்திலேயே சுட்டுக் கொல்ல வேண்டும் என கர்நாடகா விவசாயத் துறை அமைச்சர் பிசி பாட்டீல் கூறியுள்ளார்.

சமீபத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் பெங்களூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் மேடையேறி “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” (பாகிஸ்தான் வாழ்க) என முழக்கமிட்டார். இது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. அம்மாணவியை போலீஸார் உடனடியாக கைது செய்தனர்.

மேலும் அம்மாணாவியின் மீது தேச துரோக வழக்கும் பதியப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தின் விவசாயத் துறை அமைச்சர் பிசி பாட்டீல், செய்தியாளர்களை சந்தித்த போது, “நமது உணவை சாப்பிட்டு விட்டு தேசத்துக்கு எதிரான கருத்துகளை கூறுகிறார்கள். இவ்வாறு பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசும் தேச துரோகிகளை அந்த இடத்திலேயே சுட்டுக்கொல்ல வேண்டும், இதற்காக பிரதமர் மோடி சட்டம் கொண்டு வரவேண்டியது அவசியம். இது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத இருக்கிறேன்” என கூறியுள்ளார்.