மார்ச் 30 முதல் ஏப்ரல் 1 வரை 3 நாட்கள் வங்கி விடுமுறை.. உஷார் மக்களே..!
தேசிய மற்றும் தனியார் வங்கிகள் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக செயல்படாமல் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் வங்கி வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே வங்கி பணிகளை முடித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மார்ச் 30 ஞாயிற்றுக்கிழமை பொதுவான விடுமுறையாகும். அதனைத் தொடர்ந்து, மார்ச் 31 திங்கள் ரம்ஜான் பண்டிகை காரணமாக வங்கிகள் செயல்படாது. ஏப்ரல் 1 செவ்வாய் ஆண்டுக்கணக்கு சரிசெய்வதற்காக பொதுமக்களுக்கு வங்கி சேவைகள் கிடைக்காது.
எனவே மார்ச் 30 முதல் ஏப்ரல் 1 வரை மூன்று நாள்களும் வங்கிகள் இயங்காது என்பதால் ரொக்கம் மற்றும் காசோலை பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும். எனவே, முக்கிய வங்கி பணிகளை மேற்கொள்ள வேண்டியவர்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.
ஆனால் அதே நேரத்தில் மொபைல் பேங்கிங், யுபிஐ போன்ற ஆன்லைன் பரிவர்த்தனைகள் வழக்கம்போல செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Edited by Siva