ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 16 ஜனவரி 2023 (09:15 IST)

இன்று முதல் பெங்களூரு - மைசூர் இடையே மின்சார பேருந்து.. கட்டணம் எவ்வளவு?

electric buses
இன்று முதல் பெங்களூரு முதல் மைசூர் வரை மின்சார பேருந்து இயக்கப்பட இருக்கும் நிலையில் இந்த பேருந்தில் பயணம் செய்ய கட்டணம் எவ்வளவு என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
 
பெங்களூர் மைசூர் இடையே மின்சார பேருந்தில் பயணம் செய்ய ரூபாய் 300 கட்டணம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 320 கிலோமீட்டர் வரை இந்த பேருந்து பயணம் செய்யும் என்பதால் ஒரு முறை சார்ஜ் செய்து பெங்களூர் முதல் மைசூர் வரை சென்று விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்று முதல் பெங்களூர் முதல் மைசூர் வரை இயக்கப்பட இருக்கும் மின்சார பேருந்துகளுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விரைவில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பல நகரங்களிலும் சென்னை உள்பட இந்தியாவின் பல நகரங்களிலும் இந்த மின்சார பேருந்துகளை இயக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva