செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 19 டிசம்பர் 2019 (13:11 IST)

டெல்லியில் 144 தடை உத்தரவு: ராமசந்திர குஹா கைது!

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்துள்ள நிலையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாணவர்கள், எதிர் கட்சிகள் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள், பேரணிகள் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடைபெறும் இடங்களில் வன்முறை வெடிப்பதால் நாட்டில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதனால் கலவரம் ஏற்படலாம் என கருதப்படும் பதட்டம் நிறைந்த பகுதிகளுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 4 பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் ஜந்தர் மந்தர் நோக்கி பேரணி நடத்துவதற்கு கம்யூனிஸ்டு கட்சி முடிவு செய்திருந்தது. அதற்கு போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர்.

மேலும் பெங்களூர் பகுதியில் மாணவர்கள் போராட்டம் கலைக்கப்பட்டுள்ளது. டவுன் ஹால் பகுதியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய வரலாற்று எழுத்தாளர் மற்றும் ஆய்வாளர் ராமசந்திட குஹா கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.