கலப்பு திருமணம் தம்பதியினருக்கு அறை ஒதுக்க மறுத்த ஓட்டல்
பெங்களூர் நகரில் கலப்பு திருமணம் செய்துக்கொண்ட கேரள தம்பதியினருக்கு ஓட்டல் நிறுவனம் அறை ஒதுக்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த தம்பதியினர் சொந்த பணி காரணமாக பெங்களூர் சென்றுள்ளனர். அந்த ஆலிவ் ரெசிடென்சி என்ற ஓட்டலில் தங்க அறை கேட்டுள்ளனர். ஆனால் ஓட்டல் நிறுவனம் அறை ஒதுக்க மறுத்துவிட்டது. அவர்கள் கூறிய காரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த தம்பதியினர் கலப்பு திருமணம் செய்துக்கொண்டதால் அவர்களுக்கு அறை ஒதுக்க முடியாது என தெரிவித்துள்ளனர். இந்து, முஸ்லீம் ஒன்றாக சேர்ந்து வாழ முடியாது. மேலும் இதுபோன்ற தம்பதிகளால் பிரச்சனை ஏற்படும். ஆகையால் நிர்வாகம் இதுபோன்ற தம்பதியினருக்கு அறை ஒதுக்க கூடாது என உத்தரவிட்டுள்ளது என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த தம்பதியினர் இதுகுறித்து கேரள மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.