1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 5 பிப்ரவரி 2018 (11:50 IST)

கோமியத்திலிருந்து மருந்து பொருட்கள் - ஆயுர்வேத மருத்துவர்கள் சாதனை

கோமியத்தை பயன்படுத்தி ஆயுர்வேத மருந்துகளை தயாரிப்பதில் சாதனை படைத்து வருகிறது உத்தரப்பிரதேச ஆயுர்வேத மருத்துவத்துறை.

 
உத்தரப்பிரதேச ஆயுர்வேத மருத்துவத்துறை அம்மாநிலத்தில் பசுவின் சிறுநீரிலிருந்து 8 வகையான மருந்து பொருட்களை தயாரித்து, அதை நோயாளிகளின் மருத்துவ பயன்பாட்டிற்கு வழங்கி வருகிறது 
 
கோமியத்தில் இருந்து தயாரிக்கப்படும் மருத்துப் பொருட்கள்  ஈரல் பிரச்சனை, மூட்டுவலி, நோய் எதிர்ப்புத்திறன் குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு மருத்துகளாக பயன்படுகிறது என ஆயுர்வேத மருத்துவத்துறையின் செயலாளரான ஆர்.ஆர்.சவுத்ரி கூறியுள்ளார்.
 
மேலும், கோமியத்தை பயன்படுத்தி பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் நடத்துவது குறித்த ஆராய்ச்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.