திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (13:25 IST)

அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா செலவு மட்டும் எத்தனை கோடி? அறக்கட்டளை தகவல்!

அயோத்தி ராமர் கோவில் கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடி உள்பட பல பிரபலங்கள் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பது தெரிந்தது. இந்த நிலையில் இந்த திறப்பு விழா நிகழ்ச்சிக்கு 113 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாக ஸ்ரீ ராமஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

ராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ.1800 கோடி செலவு செய்யப்பட்டதாகவும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் இரண்டு கட்டமாக மேலும் சில கட்டுமான பணிகள் நடத்தப்பட இருப்பதாகவும் அதற்காக 670 கோடி வரை தேவைப்படும் என்றும் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் ராமர் கோவிலுக்கு 20 கிலோ தங்கம், 13 குவிண்டால் வெள்ளி பக்தர்களால் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளதாகவும், அறக்கட்டளையின் நிதி ஆண்டுக்கான கணக்குகள் தெரிவித்துள்ளன.

மேலும் 2023 - 24 ஆம் நிதி ஆண்டில் ராமர் கோயிலுக்காக மொத்தம் 671 கோடி செலவாகியுள்ளது என்றும் மொத்த வருவாய் 363 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில்  வட்டி தொகையாக வங்கியில் இருந்து 204 கோடி ரூபாய் வந்துள்ளதாகவும் 58 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளதாகவும் ராமர் கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

Edited by Mahendran