வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 31 மே 2023 (19:24 IST)

கொலை முயற்சி, பாலியல் பலாத்காரம்....மாடல் அழகி போலீஸில் புகார்

abuse
மராட்டிய  மாநிலத்தைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர் போலீஸில் புகாரளித்துள்ளார்.

மராட்டிய மாநிலம் மும்பை நகரில் வசிக்கும் மாடல் அழகி ஒருவர் மும்பையின் வெர்சோவா  நகர காவல் நிலையத்தில் ஒரு புகாரளித்துள்ளார்.

அதில், ராஞ்சி நகரைச் சேர்ந்த தன்வீர் அக்தர் முகமது லேக் ககான் என்ற நபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததுடன் மிரட்டியதாகவும் கூறியுள்ளர்.

மேலும், கடந்த 2020 ஆம் ஆண்டு அந்த நபரின் மாடலிங்துறை ஏஜென்ஸியில் சேர்ந்தேன். தன் பெயரை யாஷ் என்று அறிமுகம் செய்து கொண்டார். ஆனால், 4 மாதங்களுக்குப் பிறகுதான் அவரது உண்மையான பெயர்  தன்வீர் அக்தர் என்று தெரிந்துகொண்டேன். அவரை திருமணம் செய்யக் கூறி நெருக்கடி தந்தார். மும்பையில் என்னை கொல்ல முயன்றார் என்றும் அத்துடன் மேலும் சில புகார்களும் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.