ஊழலின் விளைவுதான் மொர்பி பால விபத்து! – கெஜ்ரிவால் பகீர் குற்றச்சாட்டு!
குஜராத் மாநிலத்தின் மொர்பியில் தொங்கும் பாலம் அறுந்து விழுந்தது ஊழலால் என்று டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
குஜராத் மாநிலம் மொர்பியில் அமைக்கப்பட்டிருந்த தொங்கும்பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 142 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாலம் அறுந்து விழும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிகமான மக்கள் பாலத்தில் கூடியதே விபத்திற்கு காரணம் என ஒருபக்கம் சொல்லப்பட்டாலும், எதிர்கட்சிகள் தரமற்ற வகையில் பாலம் புணரமைக்கப்பட்டதே காரணம் என குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் “மிகப்பெரிய ஊழலின் விளைவுதான் மோர்பி தொங்கு பால விபத்து. விபத்தில் உயிரிழந்தவர்களுக்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மேலும் “பாலம் கட்டுவதில் எந்த முன் அனுபவமும் இல்லாத கடிகார நிறுவனத்திடம் தொங்கு பாலத்தை கட்டுவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Edited By Prasanth.K