பஞ்சாப் முதல்வராகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்? கேள்விக்கு இதுதான் விடை..!
டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், அவர் பஞ்சாப் மாநிலத்தில் போட்டியிட்டு பஞ்சாப் மாநில முதல்வராக போவதாக ஒரு செய்தி வெளியானது. ஆனால் இதை ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது என்பதும் குறிப்பிடப்பட்டது.
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா மேற்கு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சீவ் அரோரா தான் லூதியானா மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் மாநிலத்தில் போட்டியிடவில்லை என்பது உறுதியாகி உள்ளது. அதனால், அவர் முதல்வர் பதவிக்கும் முயற்சி செய்யவில்லை என்பது தெளிவாகியுள்ளது.
முன்னதாக, வேட்பாளரை தேர்வு செய்வதற்காக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தீவிர ஆலோசனை செய்ததாகவும், அந்த ஆலோசனைக்கு பின்னர் தான் சஞ்சீவ் அரோரா லூதியானா மேற்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran