வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 17 மே 2023 (16:01 IST)

ஆர்ஜித சேவைகளுக்கான முன்பதிவு எப்போது? திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!

Thirupathi
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைகளுக்கான முன்பதிவு தேதிகளை தேவஸ்தான நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். 
 
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை ஆகிய ஆர்ஜித சேவைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் ஆர்ஜித சேவைகளுக்கு நாளை காலை 10 மணி முதல் மே 20 ஆம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் இந்த முன்பதிவு தொடங்கும் என்றும் கோவிலுக்குள் அங்க பிரதட்சணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் மே 23ஆம் தேதி முதல் காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து ஆர்ஜித சேவையில் கலந்து கொள்ள விரும்பு பக்தர்கள் நாளை முதல் தங்களது டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து கொள்ளுமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது.
 
Edited by Mahendran