வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 15 மார்ச் 2024 (13:23 IST)

தேர்தல் ஆணையர்கள் நியமனம்..! தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.!!

supremecourt
புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
 
மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டப்படி தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் பிரதமர் தலைமையிலான குழு 14-ம் தேதி கூடி, ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சாந்து ஆகிய இருவரையும் புதிய தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்தது.
 
முன்னதாக தேர்தல் ஆணையர்களை பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரை கொண்ட உயர்மட்டக்குழு தேர்வு செய்யும். ஆனால் மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த சட்டப்படி, இந்த குழுவில் பிரதமர், மத்திய அமைச்சர் ஒருவர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோரை உறுப்பினராக நியமித்தது மத்திய அரசு .
 
காலியாக உள்ள தேர்தல் ஆணையர்கள் இடங்களை புதிய சட்டங்களை கொண்டு நிரப்ப தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயா தாகூர் என்பவ வழக்கு தாக்கல் செய்திருந்தார். தேர்தல் ஆணையர் நியமனத்தில் தலைமை நீதிபதி புறக்கணித்துள்ளதாகவும் மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

 
இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையர் நியமனத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் இந்த வழக்கை மார்ச் 21ம் தேதி  மீண்டும் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.