ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 14 மார்ச் 2024 (16:11 IST)

''விடுதலை 2 ''படத்தை வெளியிட விடமாட்டேன்- இயக்குநர் ரவி தம்பி

விடுதலை 2 ஆம் பாகம் வெளியிட விடமாட்டேன் என்று வாச்சாத்தி திரைப்பட இயக்குனர் ரவி தம்பி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்த படம் விடுதலை. இப்படத்தில் அவருடன் இணைந்து விஜய்சேதுபதி, கெளதம் மேனன்,  உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
 
கடந்தாண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியான இப்படம் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்பட்ம எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
 
தற்போது விடுதலை 2  ஆம் பாகம் தயாராகி வருகிறது.
 
இந்த நிலையில், விடுதலை 2 ஆம் பாகம் வெளியிட விடமாட்டேன் என்று வாச்சாத்தி திரைப்பட இயக்குனர் ரவி தம்பி தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
என் கதையை வைத்து எடுத்த படம்தான் விடுதலை. விடுதலை ஜெகமோகன் எழுதிய துணைவன் நாவல்ஐ தழுவி எடுக்கப்படவில்லை. நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்து, விடுதலை 2 ஆம் பாகத்தை 4 முறை தள்ளிப் போட்டுள்ளேன். இனியும் சட்டம் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.