1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 25 செப்டம்பர் 2017 (06:00 IST)

மொபைல் ஆப் மூலம் பொதுக்கழிப்பறை: டெல்லி ஐகோர்ட் உத்தரவு

மொபைல் ஆப் மூலம் பொதுக்கழிப்பறையை கண்டுபிடிக்கும் புதிய வசதி டெல்லி மக்களுக்கு அறிமுகம் செய்ய டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது



 
 
டெல்லியில் உள்ள பொதுமக்களுக்கு போதுமான பொதுகழிப்பறை இல்லை என்ற பொதுநல வழக்கு ஒன்றின் விசாரணை சமீபத்தில் நடந்தபோது டெல்லியில் பொதுக் கழிப்பறைகளின் இருப்பிடத்தை மொபைல் ஆப் மூலமும், கூகுள் வரைபடம் மூலமும் எளிதாகக் கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
 
இயற்கை அழைப்புக்களின் போது மக்கள், பொது இடங்களில் அசுத்தப்படுத்தாமல் இருக்கவும், பொது கழிப்பறைகள் இருக்குமிடம் குறித்து தெரிந்து கொள்ளவும் மக்களுக்கு ஆப் மூலம், கூகுள் மேப் மூலமும் தகவல் தெரிவிக்க வேண்டியது அவசியம் என்று கூறிய நீதிபதி உடனடியாக இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அக்டோபர் 30ஆம் தேதிக்குள் நீதிமன்றத்திற்கு டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.