திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 24 செப்டம்பர் 2017 (22:25 IST)

ஒரே குடும்பத்தில் 8 பேர் தற்கொலை முயற்சி: 5 பேர் மரணம், 3 பேர் உயிர் ஊசல்

மதுரையில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தற்கொலை முயற்சி செய்த நிலையில் அவர்களில் 5 பேர் பரிதாபமாக மரணம் அடைந்தனர். 3 பேர் ஆபத்தான நிலையில் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



 
 
மதுரை மாவட்டம் யாகப்பா நகரில் நடந்த இந்த சம்பவத்தில் குறிஞ்சிக்குமரன் என்பவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர். குறிஞ்சிக்குமரன் நர்சரி பள்ளி ஒன்றை நடத்தி வருவதோடு, ஏலச்சீட்டும் நடத்தி வந்தார் என்றும், தொழிலில் ஏற்பட்ட நஷ்டமும், ஏலச்சீட்டில் ஏற்பட்ட நஷ்டமுமே இந்த தற்கொலை முடிவுக்கு காரணம் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
இந்த சம்பவத்தால் இந்த பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது. இதுகுறித்து யாகப்பா நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.