வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : வியாழன், 15 ஜூன் 2017 (13:27 IST)

23 வயது பெண்ணுடன் காதல் : மூன்றாவது திருமணத்திற்கு தயாராகும் இயக்குனர்

பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் (24) ஒரு இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


 

 
பாலிவுட்டில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை எழுதி இயக்கியவர் அனுராக் காஷ்யப். சில படங்களை அவர் தயாரித்துள்ளார். இவர் ஆர்தி பஜாஜ் என்பவரை 2003ம் ஆண்டு திருமணம் செய்தார். அதன் பின் 2009ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து விட்டார். அவர்களுக்கு ஆலியா என்ற 16 வயது மகள் இருக்கிறார்.


 

 
அதன் பின் அவர், 2011ம் ஆண்டு கல்கி கோச்லின் என்ற நடிகையை 2011ம் ஆண்டு திருமணம் செய்தார். அதன் பின் 2015ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்து விட்டார். இந்நிலையில்தான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 23 வயது சுப்ரா ஷெட்டி என்கிற இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அனுராக் வெளியிட்டுள்ளார்.


 

 
இந்த புகைப்படங்கள் மூலம் அந்த பெண்ணுடன் அவருக்கு காதல் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. விரைவில் அப்பெண்ணை அவர் திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அவருக்கு மூன்றாவது திருமணம் ஆகும்.