கொரோனா வந்தால் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிப்பேன் என சொன்னவருக்கு கொரோனா!
தனக்கு கொரோனா வந்தால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிப்பேன் எனக் கூறிய நபருக்கு இப்போது கொரோனா உறுதியாகியுள்ளது.
பாஜகவின் மேற்கு வங்க மாநில தேசிய செயலாளராக அனுபம் ஹஸ்ரா என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் ஏற்கனவே திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினராக இருந்தவர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் அவர் கலந்துகொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில் ‘எனக்குக் கொரோனா வந்தால் நான் மம்தா பானர்ஜியைக் கட்டிப்பிடிப்பேன். அப்போதுதான் அவருக்கு கொரோனா நோயாளிகளின் கஷ்டம் தெரியும்’ எனக் கூறியிருந்தார். இது பலத்த சர்ச்சைகளை உருவாக்கியது. அவர் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போலீசில் புகாரும் அளித்துள்ளது.
இந்நிலையில் இப்போது அவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.