செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 2 அக்டோபர் 2020 (19:20 IST)

நடிகர் பிரபுவுக்கு கொரோனா என வதந்தி

நடிகர் பிரபுவுக்கு கொரோனா என வதந்தி
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் விழா நேற்று அவரது மணிமண்டபத்தில் கொண்டாடப்பட்டது. துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் பெருமக்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர் 
 
ஆனால் சிவாஜியின் மகன் பிரபு இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. ராம்குமார் மற்றும் விக்ரம் பிரபு இந்த விழாவில் கலந்து கொண்டாலும் பிரபு கலந்து கொள்ளாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் அவருக்கு கொரோனா பாதிப்பு என்றும் அதனால்தான் அவர் விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றும் வதந்திகள் இணையதளங்களில் பரவியது
 
இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேட்டியளித்த பிரபு அவர்கள் தனக்கு காலில் காயம் ஏற்பட்டதால் தான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றும் தனக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் தயவுசெய்து வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்
 
இதனை அடுத்து பிரபுவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதியாகி உள்ளது