1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 14 நவம்பர் 2017 (23:59 IST)

திடீரென முடங்கிய ரிலையன்ஸ் போன்கள்: கோடிக்கணக்கில் செய்த முதலீடு என்ன ஆச்சு?

ஒருபக்கம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இந்தியா முழுவதும் கொடிகட்டி பறந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் போன் செயல் இழந்து உள்ளது. கடந்த 2002ஆம் ஆண்டு ரூ.500க்கு இரண்டு மொபைல் போன்கள் கொடுத்து மொபைல் உலகில் புரட்சி செய்த ரிலையன்ஸ் நிறுவனம், இன்று தங்களுடைய கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களிடம் சொல்லாமல் கொள்ளாமல் சேவையை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.


 


ஒரு தொலைத்தொடர்பு நிறுவனம் தங்களுடைய சேவையை நிறுத்த வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 90 நாட்களுக்கு முன்னரே அறிவிக்க வேண்டும். ஆனால் திடீரென ரிலையன்ஸ் போன் செயல் இழந்துள்ளதால் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் தவித்துள்ளனர். மேலும் ஆதார், கியாஸ், வங்கி என அனைத்திலும் இந்த மொபைல் எண்களை கொடுத்துள்ள நிலையில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பலர் விழிபிதுங்கி உள்ளனர்.

அதேபோல் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ரீசார்ஜ் கூப்பன்களை ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் கைவசம் இருப்பு வைத்திருப்பவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.5 கோடிக்கான ரீசார்ஜ் கூப்பன் தேங்கியிருப்பதாகவும், அகில இந்திய அளவில் கணக்கிட்டால் பல கோடிகளை தொடும் என்று கூறப்படுகிறது. இந்த பிரச்சனைக்கு அரசு தான் ஒரு தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து செல்போன் - ரீசார்ஜ் கூப்பன் விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர், விஸ்வநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.