திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 நவம்பர் 2019 (19:43 IST)

நாங்க ரொம்ப உஷாரு! மின்சார வேலியை தாண்டிய யானை! – வைரலான வீடியோ!

மின்சார வேலியை ஆண் யானை ஒன்று அசால்ட்டாக தாண்டும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்துவிடுவது பல இடங்களில் தொடர்ந்து வரும் பெரும் பிரச்சினை. பல விவாசாயிகள் யானைகள் புகாமல் இருக்க வயல்களை சுற்றி மின்சார வேலிகளை அமைத்து விடுகின்றனர். சில சமயம் யானைகள் தவறுதலாக உள்ளே நுழைய முயற்சிக்கும்போது மின்சாரம் தாக்கி பலியாகிவிடும் சம்பவங்களும் வாடிக்கையாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் மின்சார வேலியிட்ட வயலுக்கு சென்ற ஒரு யானை மின்சார கம்பிகள் செல்லும் தூணை தந்து தும்பிக்கையால் உச்சியை தொட்டு மெதுவாக சாய்க்கிறது. பிறகு கம்பிகளில் கால் படாமல் மெல்ல உள்ளே நுழைந்து பயிர்களை சாப்பிட தொடங்குகிறது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை குறிப்பிட்ட சிலர் ‘இயற்கைக்கு முன்னால் நாம் என்ன செய்தாலும், அது அதை மீறி வரும்’ என கருத்து தெரிவித்துள்ளனர்.