இனி 2 ஆண்டுகளுக்கு மேல் எந்த வழக்கும் நீடிக்காது: அமைச்சர் அமித்ஷா உறுதி..!
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று மசோதாக்கள் நிறைவேறிய பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இனி எந்த வழக்கும் நீடிக்காது என்றும் இதன் மூலம் 70% வழக்குகள் விரைவில் முடிவடையும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத், மராட்டியம், கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களான டாமன்-டையு, தாத்ரா-நகர் ஹவேலி ஆகியவற்றை உள்ளடக்கிய மேற்கு மண்டல கவுன்சில் கூட்டம், நேற்று குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் நடந்தது.
இதில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியபோது, இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட 3 குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக, பாரதீய நீதி மசோதா, பாரதீய குடிமக்கள் பாதுகாப்பு மசோதா, பாரதீய சாட்சியங்கள் மசோதா சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த 3 மசோதாக்கள் நிறைவேறிய பிறகு, எந்த வழக்கும் 2 இனி ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது. இந்த 3 சட்டங்களை அமல்படுத்த தேவையான உள்கட்டமைப்பு மற்றும் திறன்களை அனைத்து மாநிலங்களும் உருவாக்க வேண்டும் என்றும் அமித்ஷா கேட்டு கொண்டார்.
Edited by Mahendran