நிலக்கரி தட்டுப்பாடு எதிரொலி: அவசர ஆலோசனையில் அமித்ஷா
நிலக்கரி தட்டுப்பாடு புகார் எழுந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நிலக்கரி கையிருப்பு குறைவாக இருப்பதாகவும் இதனால் இன்னும் ஒரு சில நாட்களில் மின்வெட்டு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஆம், தமிழகத்தை பொருத்தவரை கோல் இந்தியா நிறுவனம் தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நிலக்கரியை கடந்த செப்டம்பர் மாதம் சரிபாதியாக சரிந்துள்ளது. அதேபோல் வட சென்னை தூத்துக்குடி மேட்டூர் ஆகிய பகுதிகளில் உள்ள அனல் மின் நிலையங்களில் இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிலக்கரி தட்டுப்பாடு புகார் எழுந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை நடத்துகிறார். அமித்ஷாவின் அவசர ஆலோசனையில் துறைரீதியான அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.