1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 7 ஜூன் 2019 (11:44 IST)

வாஜ்பாய் விட்டு சென்ற இடத்தில் அமித் ஷா: இது எப்போ??

மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷா டெல்லியில் வாஜ்பாய் வசித்த பங்களாவில் குடியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் வசித்தார். அதன் பின்னர் 2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலுக்கு பிறகு கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் உள்ள பங்களாவில் தங்கியிருந்தார். 
 
ஆகஸ்ட் மாதம் அவரது மறைவிற்கு பின்னர் அவரது குடும்பத்தினர், நவம்பரில் அந்த பங்களாவை காலி செய்தனர். அதற்கு பின்னர் அந்த பங்களா காலியாகவே உள்ளது. 
எனவே, அந்த பங்களாவில் அமித் ஷா விரைவில் குடியேற உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, அமித் ஷா அந்த பங்களாவிற்கு சென்று அங்கு சில மாற்றங்களை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளர்தாக செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
கடந்த முறை மோடி டெல்லியில் தலைவர்கள் வாழ்ந்த இடம் நினைவிடமாக மாற்றப்படாது என அறிவித்ததையடுத்து வாஜ்பாய் வசித்த இல்லம் நினைவிடமாய் மாற்றப்படாமல் இப்போது அதில் அமித் ஷா குடியேறுகிறார் என தெரிகிறது.