வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 9 மார்ச் 2021 (17:41 IST)

தேமுதிக,கமஹாசனின் ம.நீ.மவுடன் கூட்டணியா??? விஜய பிரபாகரன் பதில்

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிகாவுக்கு உரிய தொகுதிகள் ஒதுக்கப்படாத நிலையில், இன்று அதிமுகவிலிருந்து அக்கட்சி விலகியது.

இந்நிலையில் 235 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக அறிவிப்புகள் வெளியாகும் என அக்கட்சித் தொண்டர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது தேமுதிகவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக கமல்ஹாசன் ஆலோசனை செய்து வருகிறார்.

மேலும் தேமுதிகவை தங்கள் கூட்டணில் சேர்ப்பது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் சமக தலைவர் சரத்குமார் ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில் நடிகர் கமல்காசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ம.நீ,ம சார்பால தேமுதிகாவுக்கு ஏற்கமவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இதேபோல் பத்திரிக்கையாளர்களை சந்தித்த விஜய பிரபாகரனிடம் செய்தியாளர்கள் , ம.நீ,ம மற்றும் அமமுகவுடன் கூட்டணி வைக்கத் தயாரா எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு எந்தக் கட்சியுடணும் தேமுதிக கூட்டணி இல்லை; தேமுதிக தெய்வத்துடன் தான் கூட்டணி எனத் தெரிவித்துள்ளார்.