புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 15 ஜூன் 2021 (15:37 IST)

திமுக எம்பிக்கள் டெல்லிக்கு வரவேண்டும்… டி ஆர் பாலு உத்தரவு?

திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முதல்வருமான ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.

தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளி மாநிலம் மற்றும் டெல்லி பயணம் இதுவாகும். இந்த பயணத்தின்போது பிரதமர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை அவர் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார்.

இதையடுத்து திமுகவின் நாடாளுமன்ற குழுத்தலைவர் டி ஆர் பாலு அனைத்து திமுக எம்பிக்களும் டெல்லிக்கு வர வேண்டும் என வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது.